Capmari Movie Review
S.A சந்திரசேகர் இயக்கத்தில் அவருடைய 70-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் LOVABLE கேப்மாரி. ஜெய், வைபவி சாண்டிலா, அதுல்யா மற்றும் பல காமெடி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஜெய்க்கு பீரால் வைபவி சாண்டிலாவுடன் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் திருமணம் வரை செல்கிறது. அதே போல் மீண்டும் ஒரு பீரால் அதுல்யாவுடனும் தொடர்பு ஏற்படுகிறது, இதனால் ஜெய்யின் திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

பிரச்சனைகளை தாண்டி ஜெய்க்கும் வைபவிக்கும் திருமணமும் நடக்கிறது, திருமணத்திற்கு பின்னரும் அதுல்யா ஜெய்யை விட்ட பாடில்லை. இதனால் ஜெய் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்பது தான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜெய், அதுல்யா, வைபவி சாண்டிலா என அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை கச்சிதமாக முடித்து கொடுத்துள்ளனர். ஆனால் என்ன ஒன்னு இந்த காலத்துல இப்படியும் பொண்ணுங்க இருக்காங்களா என்ற கேள்வி நம்மை மீறி மனதுக்குள் எழுந்து விடுகிறது.

தொழில்நுட்பம் :

இசை :

சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசை சூப்பர். பாடல்கள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

ஜீவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய வேலையை செவ்வனே செய்து கொடுத்துள்ளார்.

இயக்கம் :

எஸ்.ஏ சந்திரசேகரா இப்படி ஒரு படம் இயக்கியது? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு அடல்ட் காமெடி கலந்த படமாக இப்படத்தை கொடுத்துள்ளார். ஆனால் இந்த காலத்துல இப்படியெல்லாம் பெண்கள் இருக்க வாய்ப்பே இல்லை. அதை மட்டும் எஸ்.ஏ.சி மறந்து விட்டார் போல.

தம்ப்ஸ் அப் :

1. ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பு
2. காமெடி

தம்ப்ஸ் டவுன் :

1. லாஜிக் மீறல்கள்
2. ஒரு சில காட்சிகள் கனவுல இப்படி நடக்காதே பா என்று எண்ண தோன்றுகிறது.