Losliya MariyaNesan
பிக் பாஸ் லாஸ்லியா மீண்டும் சென்னை வந்ததை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பைனல் வரை சென்றவர் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த இவர் பிக் பாஸால் தான் பிரபலமானார். பிக் பாஸிற்குள் இருக்கும் போது கவினுடன் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் லாஸ்லியா நேற்று மீண்டும் சென்னை வந்துள்ளார், சென்னை வந்ததும் லாஸ்லியாவின் ரசிகர் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வெல்கம் டு மாமியார் வீடு என்றெல்லாம் கூறி அவரை வரவேற்றுள்ளனர். வழக்கம் போல சிலர் கலாய்க்கவும் செய்துள்ளனர்.

லாஸ்லியா சென்னை வந்ததை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் காத்துக் கொண்டிருப்பதாகவும் வாழ்த்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.