Losliya latest photoshoot

கடற்கரையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா.

Losliya latest photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா மரியநேசன்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்த நிலையில் உள்ளன. தற்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் தர்ஷன் படத்தில் நடிக்கிறார். இது ஒருபுறமிருக்க லாஸ்லியா தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கடற்கரையில் சிவப்புநிற புடவையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.