மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Latest Photoshoot : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சி ஆன இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. தற்போது தமிழில் கிட்டத்தட்ட நான்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து புகைப் படங்களாக வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பக்க ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து பக்கா மாடர்ன் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.