Losliya Father Death

லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணம் அடைந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Losliya Father Death : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான லாஸ்லியா தன்னுடைய அழகிய தமிழ் பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இவர் தற்போது பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் அறிமுக நடிகருக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை லாஸ்யாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரசிகர்கள் பலரும் நடிகை லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவரது தந்தை மறைவுககு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.