Losliya Father Death
லாஸ்லியாவின் தந்தை மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவருடைய அப்பாவை கூட லாஸ்லியா பார்க்க முடியாத நிலைமையில் இருப்பதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Losliya Father Death : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த இவரது தந்தை மரிய நேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு லாஸ்லியா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் லாஸ்லியா இலங்கை வந்தால் கூட அவருடைய அப்பாவை பார்க்க முடியுமா என தெரியவில்லை. இலங்கை வருபவர்கள் கட்டாயம் 14 முதல் 21 நாட்கள் வரை தனிமைப் படுத்தப்படுத்தப்படுவார்கள்.

இப்போது லாஸ்லியாவின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. கடவுளே அவருக்கு உதவி செய் என பதிவிட்டுள்ளார்.