Bigg Boss Losliya
தளபதி விஜயின் செல்பீக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Losliya Comment On Vijay Selfie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெய்வேலியில் நடந்து வந்தது.

சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரசிகர்களுடன் தான் எடுத்து கொண்ட செல்பீ புகைப்படத்தை வெளியிட்டு நன்றி நெய்வேலி என பதிவிட்டிருந்தார் தளபதி விஜய்.

விஜயின் செம கியூட்டான இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்டுகளும் குவிந்து வந்தன, திரையுலக பிரபலங்களும் கமெண்ட் கொடுத்து வந்தனர்.

பிக் பாஸ் லாஸ்லியாவும் இந்த புகைப்படத்திற்கு ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் கொடுத்துள்ளார். அதாவது நீ பெரும் தலைவன், நிரந்தர இளைஞன் என பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் இந்த பதிவு விஜய் ரசிகர்களிடையே அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.