Losliya About Kavin Love

கவினை காதலிக்கிறார்களா என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து முடித்துள்ளார் லாஸ்லியா.

Losliya About Kavin Love : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.

இதனைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டவர் என்றே சொல்லலாம்.

மேலும் இதே நிகழ்ச்சியில்18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் லாஸ்லியா மரிய நேசன். பிக்பாஸ் வீட்டில் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இதனால் பிக் பாஸில் கவின் ஆர்மியும் லாஸ்லியா ஆர்மியும் இணைந்து இவர்கள் காதலிக்கிறார்கள் என்று புரளியைக் கிளப்பி விட்டனர்.

இருப்பினும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் பெரியதாக அவர்கள் சந்திக்கவில்லை, இருப்பினும் லாஸ்லியாவை பார்க்கும் இடத்திலெல்லாம் நீங்கள் இன்னும் கவினை காதலிக்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர்.

லைவ் வீடியோ ஒன்றில் பேசிய போது ரசிகர் ஒருவர் கவினை காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார் லாஸ்லியா.

அது என்னவென்றால் தேவை இல்லாமல் எதையும் பேசாதீர்கள் என்று கோபமாக பதிலளித்து உள்ளார்.

இதனால் லாஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.