Kaithi
கைதி வெற்றி குறித்து லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட அவரை விஜய் ரசிகர்களிடம் மாட்டி விட்டுள்ளார் ஆடை பட இயக்குனர் ரத்னகுமார்.

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார்.

தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதை பற்றி லோகேஷ் ட்வீட் ஒன்றை பதிவு செய்து நன்றி கூறி இருந்தார்.

இதனை பார்த்த ஆடை, மேயாத மான் படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் அப்படியே தளபதி 64 விஜய் என்ன வெப்பன் யூஸ் பண்ணுவாருனு சொல்லிடீங்கனா நல்லா இருக்கும் என கேள்வி கேட்டு விஜய் ரசிகர்களிடம் கோர்த்து விட்டுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.

 அதுமட்டுமில்லாமல் ரத்னகுமார் இந்த படத்திற்கு லோகேஷுடன் இணைந்து திரைக்கதை எழுதுவதால் நீங்களே சொல்லலாமே எனவும் உங்களுக்கு தெரியாத மாதிரி ஸீன் போடாதீங்க எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.