மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Lokesh Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குனராக தடம் பதித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவதாக தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தினை இயக்கினார்.

அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தினை இயக்க உள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.