Lokesh Kanagaraj Interview About Vijay

விஜய் அண்ணாவிடம் சண்டை போட்டு இதை வாங்கினேன் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj Interview About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொங்கலன்று இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து கொண்டாடி வந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் அணிந்திருந்த காப்பு ஒன்றை சண்டை போட்டு அவரிடம் இருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.