Lokesh Kanagar Comments on Master Negative Reviews

மாஸ்டர் திரைப்படத்திற்காக செய்த சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை என லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

Lokesh Kanagar Comments on Master Negative Reviews : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக மாஸ் காட்டி வருகிறது.

விஜய்யின் வித்தியாசமான நடிப்பு மற்றும் விஜய் சேதுபதியும் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆனாலும் படத்தின் நீளம், இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வு ஆகியவை நெகட்டிவ் விமர்சனங்களாக அமைந்தன.

தற்போது இதுகுறித்து பதிலளித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதாவது தளபதி விஜய்க்காக சில விஷயங்களை செய்தோம். ஆனால் அவை பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.

பாசிட்டிவ் விமர்சனங்களை எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நெகட்டிவ் விமர்சனங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.