Master Trailer

மாஸ்டர் பட டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Lokesh Interview About Master Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை மாநகரம் கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தின் டீசர் டிரைலர் வரவில்லை என்பதால் ரசிகர்கள் மனதில் எவ்வளவு வலி இருக்கிறதோ அதே வலி எங்களுக்கும் இருக்கிறது.

மாஸ்டர் படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது உறுதியாகத் தெரியாமல் டீசர் மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவது நன்றாக இருக்காது என்பதால் வெளியிடாமல் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.