Legend Saravana Upcomming Movie

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Legend Saravana Upcoming Movie Photos : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தான் சரவணன். தன்னுடைய கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதற்காக நயன்தாரா முதல் ஹன்சிகா வரை பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

விளம்பர படங்களை தொடர்ந்து தற்போது லெஜண்ட் சரவணன் திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளப் பக்கங்களில் டிரெண்ட்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.