Dindigul Sarathy 2
Dindigul Sarathy 2

திண்டுக்கல் சாரதி 2 படத்தில் கருணாசுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

Laxmi Menon About Dindigul Sarathy 2 : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக களம் இறங்கியவர் கருணாஸ். இவர் தற்போது முக்குலத்தோர் படை என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திண்டுக்கல் சாரதி. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாவதாகும் இதில் கருணாசுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக தகவல் பரவியது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

இது குறித்து பிரபல இணையதள பத்திரிகை ஒன்றில் லட்சுமி உங்கள் தரப்பில் விசாரித்தபோது அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதாவது அது கொம்பன் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்.

திண்டுக்கல் சாரதி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. அதில் கொஞ்சமும் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார் லட்சுமி மேனன்.

சமீப காலமாக படங்களில் வாய்ப்பில்லாமல் இருந்து வரும் லட்சுமிமேனன் விரைவில் இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.