ஜோதிகா, சிம்ரன் மற்றும் கியாரா அத்வானி இவர்களில் சந்திரமுகி 2 நாயகி யார் என ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Lawrence About Chandramukhi 2 Heroine : தமிழ் சினிமாவின் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பிரபு, ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக ஜோதிகாவின் கதாபாத்திரம் தான் இந்த படத்தில் முக்கியமான ஒன்று.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதில் ஹீரோவாக ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.
ஆன்லைனில் ரிலீஸாகும் லாரன்ஸின் அடுத்த படம்! – அதிகாரபூர்வ அறிவிப்பு
மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா, சிம்ரன் அல்லது கியாரே அத்வானி ஆகியோர்களில் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுவரை நாயகி குறித்து முடிவு செய்யவில்லை. தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. கொரானா வைரஸ் பேரிடர் காலம் முடிந்த பின்னரே அடுத்த கட்ட வேலைகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.