Latest Update of Valimai

வலிமை படம்பிடித்த மெகா சீக்ரெட் அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Latest Update of Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

வினோத் இயக்கும் படம் என்பதால் மற்ற போலீஸ் கதைகளைக் காட்டிலும் வலிமை வித்தியாசமான செம மாஸ் ஆன டீடெய்ல்லான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே அஜித் போலீஸாக நடிக்கும் படங்களில் காரோ அல்லது பைக்கோ ஓட்டி சாகசம் செய்வது வழக்கம். வலிமை படத்திலும் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமல்லாமல் அஜித் பஸ் சேசிங் காட்சிகளிலும் நடித்துள்ளாராம். பேங்க் லாபரி ஒன்று நடக்க அந்த ரவுடிகளை ஓட ஓட விரட்ட பஸ் ஓட்டி மிரட்டியுள்ளாராம்.

இந்த காட்சி செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த இந்த காட்சியை அஜித் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரியளவில் எகிற வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.