Latest Update of Thala61

தல 61 படத்தின் சூட்டிங் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Latest Update of Thala61 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரானா வைரஸ் பற்றி இரண்டாவது அலை படு மோசமாக பரவி வருவதால் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‌ இதனால் அஜித் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். இப்படியான நிலையில் தற்போது தல 61 படத்தின் சூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தல 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதத்தில் தொடங்கும் எனவும் இந்த படத்தையும் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.