Latest Update of Thala 61 Director

தல 61 படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இல்லை எனவும் அஜித் மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update of Thala 61 Director : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இத்திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தல 61 திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வினோத்தின் புத்திசாலித்தனமும் திறமையும் அஜித்துக்கு மிகவும் பிடித்ததால் இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் வினோத்திற்கு கொடுத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது ‌