Latest Update About Nayanthara Marriage

நயன்தாராவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest Update About Nayanthara Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நயன்தாரா.

மேலும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. நயன்தாராவின் ரசிகர்கள் எப்போது கல்யாணம் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

தற்போது நயன்தாரா ஜோசியரிடம் சென்று திருமணத்தைப் பற்றி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மார்ச் மாதம் திருமணம் ஆகும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனால் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.