Latest Update About Indian 2

உலகநாயகன் கமல்ஹாசன் தேர்தலுக்கு தயாராகி வருவதால் காஜல் அகர்வால் ஷூட்டிங்குக்கு வராமல் தேன்நிலவு என சுற்றி வருவதாலும் என்ன செய்வது என தெரியாமல் சங்கர் தவித்து வருகிறார்.

Latest Update About Indian 2 : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் தற்போது இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இதனால் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன ஆனால் இன்னமும் முடிந்தபாடில்லை.

படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கிறது என மேலும் சில கோடிகளை குறைக்க தயாரிப்பு நிறுவனம் வேற சங்கருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் சங்கர் அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறுவதால் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க தேர்தல் நெருங்குவதால் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிட இருப்பதால் ஜனவரி மாதத்திற்குள் சூட்டிங்கை முடிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.

ஆனால் காஜல் அகர்வால் திருமணம் முடிந்து தேன் நிலவு என ஊரை சுற்றி வருகிறார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் சங்கருக்கு டென்ஷன் தலைக்கேறி உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.