Latest Stills of Thala Ajith

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Stills of Thala Ajith : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2021 கோடை விடுமுறையில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளன.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.