Latest Clicks of STR

மீண்டும் செம ஸ்லிம்மாக மன்மதன் போல மாறிய சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Clicks of STR : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சை நாயகனாக வலம் வந்த இவர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக தீர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என 2 படங்களில் நடித்துள்ளார்.

ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனையடுத்து இந்த 2 படங்களுக்காக எடையை குறைத்து இருந்தார். இந்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வந்தன.

இப்படியான நிலையில் தற்போது மீண்டும் செம மாஸான லுக்கில் இருக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையத்தை மிரள வைத்துள்ளது.