Lakshmy Ramakrishnan Legal Notice to Vanitha
Lakshmy Ramakrishnan Legal Notice to Vanitha

யூட்யூப் வீடியோ நேரலையில் நடந்த பிரச்சனையால் வனிதாவிடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Lakshmy Ramakrishnan Legal Notice to Vanitha : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் இருபத்தி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமணம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் வனிதா அவரை கண்டபடி விமர்சனம் செய்திருந்தார். மேலும் நேரலை வீடியோ ஒன்றில் அவரை தகாத வார்த்தைகளால் பேசி இருந்தார். அவரது கணவரையும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் இருந்து இதுவரை தனுஷ் கடந்து வந்த பாதைகள்! – பிறந்தநாள் ஸ்பெஷல்

இந்த நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த விவகாரம் காரணமாக வனிதாவுக்கு தன்னுடைய வக்கீல் மூலமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் தன்னை அவதூறாக பேசியதற்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை மான நஷ்ட ஈடாக கேட்டுள்ளார்.

இந்த நோட்டீசை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சமூகத்திற்காக போராடும் நீதிபதியின் உண்மை முகம் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு என்னிடமே பணம் கேட்கிறார்கள்.

என்னிடமிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்க திட்டமிடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.