Kushboo Reply to Fan

சூப்பர் ஷில்பாவுடன் ஒப்பிட்டு பேசிய ரசிகருக்கு குஷ்பு கொடுத்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Kushboo Reply to Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. 90களில் நாயகியாக வலம் வந்த இவர் தற்போது குண சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ தற்போது பாஜகவிற்கு தாவி ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்எல்ஏவுக்கு போட்டி போட உள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் குஷ்புவின் புகைப்படத்தை சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான குஷ்பு அவருக்கு காரசார பதிலளித்துள்ளார்.

நீங்கள் என்னை ஷில்பாவுடன் ஒப்பிட்டு பேசியது விஜய் சேதுபதிக்கு தான் பெருமை. ஆனாலும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. திருநங்கைகளும் நம்மை போல தான் என்பதை மறந்து விடாதீர்கள் என கூறியுள்ளார்.