Kushboo Car Accident

பாஜகவில் யாத்திரைக்கு சென்ற போது குஷ்புவின் கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Kushboo Car Accident : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இணைந்து செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் இவருக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஐக்கியமானார் குஷ்பூ. பாஜகவில் இணைந்த குஷ்பு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

பாஜக தற்போது தமிழகத்தில் வேல் யாத்திரையை நடத்தி வருகிறது. மதுராந்தகம் அருகே நடக்கவிருந்த வேறு யாத்திரையில் நடிகை குஷ்பு கலந்து கொள்ள காரில் சென்றுள்ளார்.

செங்கல்பட்டு அருகே கன்டெய்னர் லாரி மீது மோதியதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்துள்ளது. காருக்குள் இருந்த குஷ்பு மட்டுமில்லாமல் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.