ரத்தம் ரத்தம் சொட்ட ஆக்ரோஷத்துடன் இருக்கும் த்ரிஷா பட போஸ்டர் இணையத்தில் லீக்காகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக 2000-ல் இருந்து இன்று வரை கலக்கி வருபவர் திரிஷா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ், விஜய் சேதுபதி என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.
தற்போது இவர் நாயகியை மையமாக கொண்ட கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அப்படியான கதையம்சத்தில் உருவாகி வரும் திரைபடம் தான் குற்றப்பயிற்சி.
வெர்னிக் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை ஜி. விவேகானந்தன் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
த்ரிஷா ரத்தம் சொட்ட சொட்ட ஆக்ரோஷமாக காட்சியளிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.