Ks Ravikumar Relationship with Nagesh

பழம்பெரும் நடிகர் நாகேஷ் இடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் அவருடைய பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Ks Ravikumar Relationship with Nagesh : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், நம்பியார், ஜெமினி கணேசன் என பல நடிகர்களுடன் அப்போது இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆச்சி மனோரமா வுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

மேலும் விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அவர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதற்கு உச்ச நட்சத்திரமாக இருந்த போது இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

அதன் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வலம் வரத்தொடங்கினார். இப்படியான சமயத்தில்தான் நடிகர் நாகேஷின் மார்க்கெட் குறைந்து சொத்துக்களை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

தன்னுடைய குரு என்ற காரணத்தினால் ரவிக்குமார் நாயக்கருக்கு அவருடைய படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளார். இருப்பினும் பங்களாவை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போது நாகேஷின் பங்களாவை கேஎஸ் ரவிக்குமார் தான் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.