KS Ravikumar About Rajinikanth Political

அடுத்த படம் பற்றியும் ரஜினியின் அரசியல் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

Ks Ravikumar About Rajinikanth Political : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் கேஎஸ் ரவிக்குமார். இவரது தயாரிப்பில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் உருவாகி வருகிறது.

இவர் அடுத்ததாக ரஜினிகாந்த்தை இயக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதாவது அடுத்து யாருடன் படம் பண்ணினேன் என எனக்கே தெரியாது. ரஜினி, கமல் என அனைவரிடமும் பேசி வருகிறேன். அவர்களே இந்த கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அழைப்பார்கள், அப்போது கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது எனக்கும் வருத்தம் தான். ஆனாலும் ரஜினிகாந்த் கூறிய காரணத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.