Ks Ravikumar About Join With Rajinikanth

தன்னுடைய இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றி கே.எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார்.

Ks Ravikumar About Join With Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனருமான மற்றும் நடிகராகவும் வலம் வருபவர் கே.எஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் மலையாள திரைப்படமான “ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்” படத்தை தமிழில் “கூகுள் குட்டப்பன்” என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்ய உள்ளார்.

மேலும் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் ஹீரோவாகவும், லாஸ்லியா ஹீரோயினாகவும், இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந் நிலையில் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது.

பூஜை நடைபெற்ற போது அவரிடம் ரஜினியுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கேஎஸ் ரவிக்குமார் மாதமொருமுறை நட்பு ரீதியாக தொடர்ச்சியாக ரஜினியை சந்தித்து வருவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் ராணா திரைப்பட கதையை மீண்டும் கூற சொல்லிக் கேட்டு நல்ல கதை என்றும் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

ஆனால் தற்போது அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இப்போது முடியாது எனவும் விரைவில் கண்டிப்பாக செய்வோம் என்றும் பதிலளித்து உள்ளார்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பா, லிங்கா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் கே. எஸ் ரவிக்குமார்.

இந்தத் திரைப்படத்தில் இவர்களது கூட்டணி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.