KPY Yogesh Marriage Photos

விஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம் நடந்து முடிந்ததை பற்றி கே பி ஒய் வினோத் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

KPY Yogesh Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் யோகேஷ். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவரின் திருமணத்திற்கு கலக்கப்போவது யாரு வினோத் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு திருமண வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவ ரசிகர்களும் யோகேஷ்க்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.