KPY Naveen About Soorarai Pottru

சூர்யாவுக்கு நடிக்க தெரியாது என்பது உண்மை தான் என சூரரைப்போற்று படத்தின் டப்பிங் ஆர்டிஸ்ட் கூறியுள்ளார்.

KPY Naveen About Soorarai Pottru : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று.

சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக நவம்பர் 12-ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஒரு சிறு காட்சி அப்துல்கலாம் இடம் பெறுவது போல காட்சிகள் இருக்கும். அச்சு அசலாக அப்படியே அப்துல் கலாம் குரல் போலவே டப்பிங் கொடுத்தது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

படம் பார்த்தால் பெரும்பாலானோர் கூகுளில் அப்துல் கலாமுக்கு குரல் கொடுத்தது யார் என்று தேடத் தொடங்கினர். விஜய் டிவி பிரபலமான நவின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அப்துல் கலாம் ஐயாவுக்கு குரல் கொடுத்தது நான்தான். இப்படி ஒரு அருமையான வாய்ப்பு கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் மீரா மிதுன் சொன்னது போல சூர்யா சாருக்கு நடிக்கத் தெரியாது தான். இந்தப் படத்தில் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனுக்கு தரமான பதிலடி இது என தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.