KPY Dheena With Vijay Moments
KPY Dheena With Vijay Moments

தீனா கொடுத்த பல்பால் கடுப்பான விஜய் தீனாவின் முதுகில் ஒரு அடி கொடுத்துள்ளார்.

KPY Dheena With Vijay Moments : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்போது தீனாவும் பிரியங்காவும் சேர்ந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மாஸ்டர் பட அனுபவம் குறித்து பிரியங்கா கேட்டார்.

அதற்கு தீனா மாஸ்டர் படத்தில் ஒரு நாள் நாங்கள் அனைவரும் ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தளபதி வந்தார் என்னையும் அழைத்திருந்தால் நானும் வந்திருப்பேனே என கூறினார். அதன் பிறகு நான் ஒரு கேள்வி கேட்க அதற்கு நீங்கள் சரியான பதில் சொல்ல வேண்டும் என கூறினேன்.

அதன்பிறகு ஒருவனாய் எல்லாரும் கோபாலு கோபாலு என அழைத்தார்கள் அதற்கு காரணம் என்ன என கேட்டேன். அதன் பிறகு விஜய் அதைப் பற்றி சீரியசாக யோசித்துவிட்டு தெரியவில்லை எனக் கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அவன் பெயர் கோபால் எனக் கூறினேன். இதனால் கடுப்பான விஜய் என்னை குனிய வைத்து முதுகில் முழங்கையால் ஒரு அடி கொடுத்தார்.

பிரபல நடிகரை கண்டும் காணாமல் போன ஷாலினி, விளாசி எடுத்த அஜித் – பிரபல நடிகர் ஓபன் டாக் (வீடியோவுடன் இதோ)

அதன் பிறகு விஜய் ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஏரியாவுக்கு ஆப்போசிட் என்ன எனக் கேட்டார்‌. நான் ஆப்போசிட் ஏரியா என கூறினேன்.

அதற்கு விஜய் இல்லை இறங்குயா எனக் கூறினார். அதன் பிறகு போனில் காமெடி செய்வது நீதானே எனக் கேட்டார் ஆமாம் என கூறினேன்.

அதற்கு தளபதி விஜய் எனக்கு ஒரு வீடியோ காட்டு எனக் கூறினார். சிம்பு நம்ப ஷோவிற்கு வந்த போது நான் பேசிய வீடியோவை காட்டினேன் அவர் ரசித்து பார்த்தார்.

தீனா இவ்வாறு கூறியதும் இதற்கிடையே பிரியங்கா குறுக்கிட்டு அந்த ஷோவில் நான் ரெட் கலர் உடையில் மிகவும் அழகாக இருந்தேன் தளபதி என்னை பார்த்தாரா என கேட்டார்.

அதெல்லாம் அவர் ஸ்கிப் பண்ணிட்டு பார்த்தார் என பிரியங்காவிற்கு பல்பு கொடுத்துள்ளார் தீனா.