59 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Kovai Sarala About Marriage Life : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் தொடர்ந்து பல காமெடி வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இது பெண் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

கோவை சரளாவின் இந்த பேச்சு பலரையும் நெகிழ வைத்துள்ளது.