Koodankulam Anumin Nilayam : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Koodankulam, Anumin Nilayam

Koodankulam Anumin Nilayam :

புதுடெல்லி: கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார்.

மேலும் இந்த மாநாட்டில், கூடங்குளம் தவிர, மேலும் 6 இடங்களில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே இரண்டு நாள் அரசு முறை பயணமாக மோடி இன்று ரஷ்யா புறப்படுகிறார்.

இந்த பயணத்தின்போது ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் கூடங்குளம் தவிர, இந்தியாவில் மேலும் 6 இடங்களில் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

மேலும் ரஷியாவில் உள்ள விலாடிவோஸ்டோக் நகருக்கு நாளை சென்றடையும் பிரதமர் மோடி அங்குள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை ரஷிய அதிபருடன் பார்வையிட உள்ளார்.

அதோடு, இரவு விருந்துக்கு பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். மறுநாள் காலை பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்.

அதோடு கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்நகரில் நடைபெறும் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியையும் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பார்க்கிறார்கள்.

இவ்வாறு இரு நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார். மேலும் இந்த பயணத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தவிர்த்து, மேலும் 6 இடங்களில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் ஏற்பட உள்ளது முக்கியமான ஒன்றாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.