KMK Release Date

KMK Release Date : மாணிக் சத்யா இயக்கத்தில் மலர்கொடி முருகன் தயாரிப்பில் உருவாகியுள்ள காதல் முன்னேற்ற கழகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களை விட சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிகமாக ரிலீஸாகி வருகின்றன.

அந்த வரிசையில் ப்ரிதிவி ராஜ், சாந்தினி ஆகியோர் நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள திரைப்படம் காதல் முன்னேற்ற கழகம்.

சிங்கம் புலி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 10-ம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1985 முதல் இன்று வரையிலான காதல் பற்றி இப்படம் காமெடியாக பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக காமெடி படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அதிலும் காதல் பற்றிய காமெடி படம் என்றால் சொல்லவா வேண்டும்?

காதல் முன்னேற்ற கழகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி படமாக அமைய கலக்கல் சினிமா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Kadhal Munnetra Kazhagam

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.