Kiran Bedi vs Nanjil Sampath
Kiran Bedi vs Nanjil Sampath

Kiran Bedi vs Nanjil Sampath – புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தில் அம்மாநில பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கிரண்பேடி ஆணா? பெண்ணா? என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

புதுச்சேரியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது. எனவே அக்கட்சி சார்பில் வைத்தியலிங்கம் என்பவர் களமிறங்கியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தற்போது திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வைத்தியலிங்கம் ஆதரித்து நாஞ்சில் சம்பத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் “நாஞ்சில் சம்பத் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்தார்.

அதாவது, கிரண்பேடி ஆணா? பெண்ணா? என்று தெரியவில்லை” என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

கிரண் பேடி ஆண் என்பதைப் போல அவரது கருத்து அமைந்திருந்தது. இது பாஜகவினரை மட்டுமல்லாது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக செயலாளர் ரவிச்சந்திரன் சார்பில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாஞ்சில் சம்பத் பிரச்சாரத்திற்கு புதுச்சேரியில் தடை விதிக்கப்படுமா? அல்லது வேறு மாதிரியான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.