அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடிக்கப் போவது யார் என்பது தெரியவந்தது.

Kiara Advani in Anniyan Remake : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அந்நியன். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்து இருப்பார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெற்றிபெற்றது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் உருவாக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சங்கர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க இந்தியில் அந்நியன் படத்தின் ரீமேக் உருவாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் இந்தியில் வெளியான ஒரு வெப் சீரிஸ் தொடரில் சுயஇன்பம் காணும் காட்சியில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.