KGF2 Aadhira FL in Ajith Version
KGF2 Aadhira FL in Ajith Version

தல அஜித் வெர்ஷனில் கே ஜி எஃப் 2 ஆதிரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

KGF2 Aadhira FL in Ajith Version : கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகிஉலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.

பாகுபலிக்கு பிறகு ரசிகர்கள் மிகவும் ரசித்த திரைப்படமாக அமைந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஆதிரா என்ற கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நடித்துள்ளார்.

TRP-யில் மூன்றாவது முறையாக சாதனை படைத்த விஸ்வாசம் – வெளியானது மிரட்டலான அறிவிப்பு!

நேற்று ஆதிரா கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் இதை ஆதிரா பர்ஸ்ட் லுக் போஸ்டரை தல அஜித் வெர்ஷனில் உருவாக்கியுள்ளனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மையில் கே ஜி எஃப் 2 படத்தில் அஜித் இருந்தால் எப்படி இருக்கும் என்ற அளவிற்கு ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது அந்த போஸ்டர்.

https://m.facebook.com/story.php?story_fbid=779720142865206&id=219306928906533