KGF Chapter 2
KGF Chapter 2

KGF Chapter 2 – தமிழகத்தில் பெரும்பாலும் ஓடக்கூடிய பிறமொழி படங்கள் ஒன்று ஆங்கில படங்களாக இருக்கும் அல்லது தெலுங்கு படங்களாக இருக்கும்.

தற்போது மலையாள படங்களும் தமிழகத்தில் பெருவாரியாக வசூல் செய்ய துவங்கிவிட்டன.

இந்த பட்டியலில் ஒரு கன்னட படம் இணைந்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். கன்னட சூப்பர்ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழகத்திலும் வசூல் மழை பொழிந்தது.

புடவையை இப்படியா கட்டுவீங்க? – ரம்யாவை விளாசும் நெட்டிசன்கள்.!

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் துவங்கியது. இதில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட பையன்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கேரக்டரில் நடிக்க ஆடிஷன் நடத்துவதாக படக்குழு அறிவித்தனர்.

இதைதொடர்ந்து இந்த ஆடிஷனில் பங்கேற்க 5000-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை..ரஜினியை போல கூறும் கமல்.!!

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படு பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் மேலும் சண்டைக்காட்சிகளில் மேலும் அனல் தெறிக்கும் எனவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடித்தவர்கள் போக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

KGF Chapter 2
KGF Chapter 2