KGF 2 Shooting Spot Video
KGF 2 Shooting Spot Video

இயக்குனர் பிரசாந்த் நீல் கே ஜி எஃப் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

KGF 2 Shooting Spot Video : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப்.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக படம் ரிலீசாகுமா ஆகாதா என்பது கேள்வி குறியாகவே இருந்து வருகிறது.

“விஜய்யும் நம்மை மாதிரி எதையும் வெளிக்காட்ட மாட்டாப்ல போல!” – சூர்யா பரபரப்பு பேச்சு!

இப்படியான நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேஜிஎப் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் படத்திற்கான செட்டப தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் மரண மாஸாக இருக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த வீடியோவை குறித்த கமெண்ட்களையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆரை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது அதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/prashanth_neel/status/1271306234998616065?s=19