Kennedy Club Movie Review : Plus and Minus Of Kennedy Club.! | Sasikumar | Suseendhiran | Bharathi Raja | Kollywood Cinema News
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதி ராஜா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கென்னடி கிளப்.

Kennedy Club Movie Review : 

படத்தின் கதைக்களம் :

ஒட்டன் சத்திரம் என்ற ஊரில் பாரதி ராஜா பெண்களின் கபடி அணி ஒன்றிற்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த அணியை எப்படியாவது உலகத்திற்கு காட்ட வேண்டும் என கூறுகிறார்.

திடீரெனெ இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக பாரதி ராஜாவின் சிஷியனான சசிகுமார் இந்த அணியை வழி நடத்த தொடங்குகிறார்.

அதன் பின்னர் இந்த அணியில் இருந்து ஒரு பெண் தேசிய அளவில் விளையாட தேர்வாகிறார். ஆனால் அப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ரூ 30 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். இதனால் அந்த பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

அதன் பின்னர் இந்த கபடி குழு என்ன செய்கிறது? சசிகுமார் பாரதி ராஜாவின் கனவை நிறைவேற்றினாரா என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

நிஜத்திலும் ஜெயித்து காட்டிய சுசீந்திரனின் கென்னடி கிளப் பிரபலங்கள்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சசிகுமார், பாரதி ஆகியோரின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டியதில்லை, இந்த படத்திலும் இவர்கள் அந்த காதாபாத்திரங்களாவே வாழ்ந்துள்ளனர்.

கபடி குழுவில் உள்ள பெண்களும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கபடி போட்டியின் காட்சிகள் நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கின்றன.

தொழில் நுட்பம் :

இசை :

டி. இம்மானின் பிண்ணனி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது, பாடல்களும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது, நம்மை ரசிக்கவும் வைத்துள்ளது.

ஒளிப்பதிவு :

ஆர். பி குருதேவ்வின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் நம் கண் முன் நிறுத்துகிறது. ஒரு கபடி போட்டியை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

எடிட்டிங் :

அந்தோணியின் எடிட்டிங் கனகச்சிதம், படத்திற்கு என்ன தேவையோ அந்த காட்சிகளை மட்டும் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

படத்திற்கு படம் வித்தியாசமான கதை மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் சுசீந்திரன், இந்த படத்திலும் அதை சிறப்பாகவே செய்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் நடக்கும் அரசியலை வெளிப்படையாக பேசியுள்ளார்.

YouTube video

REVIEW OVERVIEW
கென்னடி கிளப் விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kennedy-club-movie-reviewமொத்தத்தில் கென்னடி கிளப் பெண்களின் திறமைகளை பேசும் படம்.. பார்த்து பாராட்ட வேண்டிய படமும் கூட.