நடிகரிடம் பந்தயத்தில் தோற்று தோப்புக்கரணம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Punishment Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்குவில் ரங்தே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹூரோவாக நிதின் நடிக்க வெங்கரி அட்டுலு என்பவர் இயக்கியுள்ளார்.

நிதின் மற்றும் வெங்கரி ஆகியோர் கீர்த்தி சுரேஷின் உணவுக்கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் பந்தயம் வைத்துள்ளார். இந்த பந்தயத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்று போக 10 தோப்புக்கரணம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.