Keerthy Suresh
மலையாள சினிமாவில் முதல் முறையாக கீர்த்தி சுரேஷுக்கு மிக பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

Keerthy Suresh Next Movie : தென்னிந்திய சினிமாவில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களை தொடர்ந்து தற்போது ரஜினியுடனும் சேர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இவருக்கு தற்போது மலையாள சினிமாவில் இயக்குனர் ப்ரியதர்ஷன் மோகன் லால், சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து ரூ 100 கோடி பட்ஜெட்டில் இயக்கி வரும் வரலாற்று படமான குஞ்சலி மரைக்கார் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் ரிமேக்காகும் ரஜினி படம்.. மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

தமிழில் ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தாலும் மலையாள சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது இதுவே முதல் முறை.

இப்படத்தை வரும் மார்ச் 26-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.