Keerthy Suresh in Poniyin Selvan Poster

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கம்பீரமான குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh in Poniyin Selvan Poster : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். தற்போது இவர் வாழ்நாள் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் நடந்து முடிந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், கம்பீரமான குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், நந்தினியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கம்பீரமான குந்தவை கதாபாத்திரத்தில் இருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.