Keerthy Suresh in Anirudh Birthday Celebration

இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Keerthy Suresh in Anirudh Birthday Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளரான அனிருத் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் எழுப்பப்பட்டது.

ஆனால் நிஜத்தில் கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் அனிருத் பிறந்தநாளில் கலந்து கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.