Keerthy Suresh film enters IFF
Keerthy Suresh film enters IFF

Keerthy Suresh film enters IFF – ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

இவருக்குள் இப்படியொரு திறமையா? என ஒட்டுமொத்த திரையுலகே ஆச்சரியப்படும் அளவு மெய் சிலிர்க்க வைத்தது கீர்த்தி சுரேஷின் நடிப்பு.

பாலிவுட்டில் இடம் பிடிக்க ஒல்லியான கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்.!

சாவித்ரியை தெரியாத தலைமுறைக்கும் சாவித்ரியின் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்தியவர். 30 ஆண்டுகால பயணத்தை கொண்ட கதையில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஏற்ற முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதோட ஒரு நாயகியை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்யலாம் எனும் நம்பிக்கையை விதைத்த படம் நடிகையர் திலகம்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட இப்படம் விரைவில் சீனாவில் நடக்கும் சர்வதேச ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாம்.

தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா காஞ்சனா 3? மிரட்டும் வசூல் நிலவரம்!

இதை தெரிவித்த இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படம் நிச்சயம் விருது பெறும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.