Actress Keerthy Decison

Actress Keerthy Decision : பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி இருப்பதால் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் தமிழில் இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தனுஷுடன் தொடரி படத்தில் நடித்ததிலிருந்து தொடர்ந்து பல மீமஸ்கள் கீர்த்தியை கலாய்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இறுதியாக விஷாலுடன் இணைந்து நடித்திருந்த சண்டக்கோழி 2, விஜயுடன் இணைந்து நடித்திருந்த சர்க்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் ஒரு பொம்மையாகவே பயன்படுத்தி இருந்ததால் தொடர்ந்து பல மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.

இதனால் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படவாய்ப்புகளை பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள இனி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக தயாரிப்பு நிறுவனங்களிடம் மறைமுகமாக கூறி வருகிறாராம்.

இதனை அறிந்த ரசிகர்கள் அடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இப்போ கவர்ச்சியா நடிக்க வச்சுட்டீங்களே என்ன புலம்பி வருகின்றனர்.