Keerthy Suresh About Marriage Controversy

4 முறை திருமணமானதாக வெளியான தகவலால் நொந்து போயுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh About Marriage Controversy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகையின் மகளான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் பிஸியாக இருவரும் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என தொடர்ந்து வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் சமீபத்தில் இவருக்கு வெவ்வேறு நபர்களுடன் நான்கு முறை திருமணம் ஆகிவிட்டது என வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னைப் பற்றி வெளியான தவறான தகவலால் கீர்த்தி சுரேஷ் நொந்துபோய் விளக்கமளித்துள்ளார். எனக்கு நான்கு முறை திருமணம் ஆனதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.