Keerthi Suresh to Pair up with Aadhi : Bollywood, Tollywood's leading heroine Keerthi Suresh has come up with | Kollywood | Tamil Cinema

Keerthi Suresh to Pair up with Aadhi :

தெலுங்கில கீர்த்தி சுரேஷ் மிருகம் ஆதிக்கு ஒரு படத்தில ஜோடியா நடிக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு தமிழ் சினிமாவில விக்ரம் பிரபு ஜோடியா இது என்ன மாயம் படம் மூலமா அறிமுகமானவங்க கீர்த்தி சுரேஷ்.

முதல் படம் தோல்விய தழுவினாலும் அடுத்து வெளியான ரஜினி முருகன் இவங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்துச்சு.

பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ், அதுவும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகருடன்.!

தொடர்ந்து தொடரி, பைரவான்னு முன்னணி நடிகர்களோட நடிச்ச கீர்த்தி சுரேஷ் ஒரேடியா தமிழ் சினிமாவோட முன்னணி நடிகையா உயர்ந்தாங்க.

குறிப்பா போன வருஷம் வெளியான நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷோட கேரியர்ல மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

அதுவரை ஹீரோவாட சேர்ந்து டூயட் பாடுற வேடங்கள்ல மட்டுமே நடிச்சிட்டு வந்த கீர்த்தி, அதுக்கப்புறம் நல்ல கனமான கதைகளை தேர்வு செஞ்சு நடிக்கத் தொடங்கினாங்க.

அந்த வகையில இப்போ பாலிவுட், டோலிவுட்னு முன்னணி ஹீரோயினா கீர்த்தி சுரேஷ் வலம் வந்திட்டு இருக்காங்க.

Keerthi Suresh to Pair up with Aadhi : Bollywood, Tollywood's leading heroine Keerthi Suresh has come up with | Kollywood | Tamil Cinema

இதில தெலுங்கில இவங்க மிருகம் ஆதிக்கு ஒரு படத்தில ஜோடியா நடிக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு. மேலும் இப்படத்துக்கு ’சகி’ன்னு பேர் வெச்சிருக்கிறதாவும் இது ஸ்போர்ட்ஸ் படம்னும் சொல்லப்படுது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.